உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறைநாளில் பழநியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருப்பு!

விடுமுறைநாளில் பழநியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருப்பு!

பழநி: பழநியில் விடுமுறையை முன்னிட்டு தீர்த்தக் காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு நேற்று பழநியில் கொடுமூடி தீர்த்தக் காவடிக் குழுவினரும், சுற்றுலா பயணிகளும் அதிகளவு குவிந்தனர்.  ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் 4 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்தனர். ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி, கையேந்தி வியாபாரிகளால் பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்குகிரிவீதியில் பக்தர்கள் அவதிப்பட்டனர். கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் முறையில்லாமல் வாகனங்கள் நிறுத்தப் பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !