உத்தரகோசமங்கை கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா
ADDED :3527 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் 4வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தேவேந்திர சிவாச்சாரியார், ரமேஷ், கணேஷ் குருக்கள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். மூலவரான மங்களேஸ்வரிக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு ராஜ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, சக்தி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. மாலை 5 மணியவில் விஷேச தீபாராதனை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் மற்றும் கோவில்பட்டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.