உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

மஞ்சூர்:மஞ்சூர் அடுத்துள்ள கண்டிபிக்கையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆண்டு விழா பூஜை நடந்தது.மஞ்சூர் அடுத்துள்ள கண்டிபிக்கையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் வருடாந்திர திருவிழாவையொட்டி, கொடியேற்றுதல் நிகழ்ச்சி; அம்மன் திருவீதி உலா நடந்தது. முத்து மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !