சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம்
ADDED :3527 days ago
சாத்தூர்: சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று காலையில் நாட்கால் நடும் விழாவுடன் துவங்கியது. சாத்தூர் முக்குராந்தல் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்.3 ல் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலையில் கோயிலில் நாட்கால்நடும் விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நாட்கால் நடப்பட்டது. மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினமும் மாலையில் உற்சவ மாரியம்மன் ரிஷபம், சப்பரம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல் நடக்கிறது. ஏப்.,3 இரவு அம்மனுக்கு பொங்கல் விழாவும், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.