அவிநாசி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :3511 days ago
அவிநாசி : கணியாம்பூண்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா, கடந்த வாரம் சாட்டுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. படைக்கலம், அம்மை அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவற்றுக்கு பின், கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோவில்களில், பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, சக்தி அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம், படைக்கலம் ஆகியன நடந்தது. நேர்ந்து கொண்ட பெண்கள், பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீர் விழாவுடன் விழா நிறைவுற்றது. அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.