கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்
ADDED :3592 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதுதல் விழா நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின், 51 பதிகங்களையும், அதிலுள்ள, 658 பாடல்களையும் ஓதும் நிகழ்ச்சி, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 7 மணிக்கு துவங்கியது. பழனி துறவி ராஜம்மாள் முன்னிலையில், திருக்கழுக்குன்றம், சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் தாமோதரன், ஓதினார். கரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.