உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேம்!

காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேம்!

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு, அம்மையாருக்கு சிறப்பு அலங்கரத்தில் காட்சி அளித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் அம்மையார் ஐக்கிய விழாவை  முன்னிட்டு அம்மையாருக்கு பலவகை திரவங்காளால் அபிஷேம் மற்றும் தீபாரானை நடைபெற்றது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்று அழைக்கு காரைக்கால் அம்மையார் இவருக்கு தனி கோவில் உள்ளது.கைலாசநாதர்  கோவில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடப்பது வழக்கம். புனிதவதியார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அம்மையார் ஐக்கிய  விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் இசை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !