உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வதீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!

பார்வதீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் சூரிய பூஜை விழா நேற்று துவக்கியது.

காரைக்காலில் திருதெளிச்சேரி என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோவில்பத்துவில் சுயம்புவர தபஸ்வினி அம்பிகை உடனமர் பார்வதீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் சூரிய பகவான் பூஜித்த ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகும் மேலும் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சூரிய பூஜை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேக நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது.பின் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோவிலில் மாலை5.45 மணிக்கு சூரிய கதீர்கள் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வர் மீது விழுந்தது.அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.சூரிய பூஜை விழா வரும் 1ம் தேதி வரை நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி அதிகாரி ஆசைத்தம்பி சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !