உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் எப்படிப்பட்டவர்?

கடவுள் எப்படிப்பட்டவர்?

கடவுள் கருணையே வடிவானவரா? இல்லை, அவர் கருணைமிக்கவர்; கொடூரமும் கொண்டவர். அவர் மலரைவிட மென்மையானவர்; அதே சமயம் கடினமானவரும்கூட. சில சமயம் தாய் போல் அன்பு பாராட்டுவார். சில சமயம் (காலத்தை விழுங்கும்) கால பைரவியாக, பயங்கரியாகக் காட்சி அளிக்கிறார். அவரது வடிவங்கள் எல்லையற்றன. அவரது குணங்கள் எல்லையற்றன. ஒருவனுக்கு வழிகாட்டுவது எப்படி என்பதையும், அவனுக்கு வரம் தருவது எப்படி என்பதையும் அவரே அறிவார்! இவை அனைத்தும் மனிதன், ஏன் தேவர்களும் அறிய முடியாத ரகசியம்.  அவர் எல்லையற்ற அன்புடையவராகவும், எல்லையற்ற  கொடுமையானவராகவும் இருக்கிறார். இவை அனைத்தும் அவரின் எண்ணப்படியே நடக்கின்றன. நமது எண்ணங்களாலும், விருப்பங்களாலும் அவரை வழிப்படுத்த முடியாது. நாம் அவருக்குரியவர்கள். அவர் விரும்பிய வண்ணமே நம்மை நடத்துவிக்கிறார்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !