சர்க்கரை விநாயகர்!
ADDED :3878 days ago
ஆழித் தேரோடும் திருவாரூரின் கீழவீதியில் ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் இந்தப் பிள்ளையாருக்கு மிகப் பொருத்தமான பெயர்தான். இவரை வேண்டிக் கொண்டால், சகல கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை சர்க்கரையாய் இனிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனுநீதிச் சோழன் இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, தனது நகர்வலத்தைத் துவங்குவார். பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ பெருவுடையாரும் இவரை வழிபட்டதாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. இப்படி ராஜாக்கள் வழிபட்ட மிகப் பழைமையான இந்த பிள்ளையாருக்கு, ராஜ அலங்காரமும் பொருத்தம்தான். மாணவர்கள் கல்வியில் சிறக்க ஏலக்காய் மாலை சார்த்தியும், திருமணத் தடை அகல 108 தேங்காய் உடைத்தும், நெய் தீபம் ஏற்றியும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டில் கட்டியும் இந்த ஆனைமுகத்தானை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.