அரசியல் புகழ்!
ADDED :3878 days ago
திருப்போரூர் முருகன் கோயிலில் பூஜைகள் வான்மீகேஸ்வரரிடம் தொடங்கி, பைரவரிடம் முடிகின்றன. சூரபத்மன் முதலானோரை வதைத்ததால் உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்ய முருகப்பெருமான் முதலில் வரன் மீகேஸ்வரரை பூஜித்தார். ஆகையால் இங்கு முதல் பூஜை வான்மீகேஸ்வரருக்குத்தான். இந்த முருகப் பெருமானை மனமுருகி தரிசித்தால் அரசியலில் பெரும்புகழ் பெறலாம் என்பது நம்பிக்கை!