மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3585 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை மொத்தேபாளையத்தில், மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் விழா துவங்கியது. முளைப்பாலிகை, தீர்த்தக் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் திருவிளக்கு வழிபாடு, விமான கலசம் அமைத்தல், முதற்கால யாக வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் இரண்டாவது கால ÷ வள்வியும், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க புனிநீர் தீர்த்தக்குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி விமான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பின், விநாயகர் மீதும் புனிதநீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.