பரமக்குடியில் பூப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் வீதியுலா
ADDED :3510 days ago
பரமக்குடி: பரமக்குடியில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணத்தையொட்டி பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்ச் 23 ம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை 10 மணிக்கு சவுந்தர வல்லித்தாயாருக்கும், சுந்தரராஜப் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சலில் அருள்பாலித்த சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை முழங்க ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.