சித்திவிநாயகர் கோயிலில் ஹயக்ரீவர் பிரதிஷ்டை
ADDED :3513 days ago
ராஜபாளையம்: முடங்கியார்ரோடு பெரியசுரைக்காய்பட்டி சித்திவிநாயகர் கோயிலில் ஹயக்ரீவர், லட்சுமணர், ராமர், சீதை பிரிதிஷ்டை, சிறப்பு யாகம் நடந்தது. பிரதிஷ்டை சுவாமிகள், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அடுத்த நாள் கோயிலின் வருஷாபிஷேகம் நடந்தது. விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.