உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியவர்களுக்கு மரியாதை

பெரியவர்களுக்கு மரியாதை

வயதில் முதியோர்களை அவமதிக்கவோ, அவர்களது வயதிற்கு தகுந்த மரியாதை கொடுக்காமலோ இருத்தல் கூடாது. மேலும் அவர்களை தவறாகவோ, பெருசு என்றோ மரியாதைக் குறைவாகவோ பேசக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதவர்களை நபிகள் நாயகம் கடுமையாகவே கண்டிக்கிறார்.நரைத்துப்போன, முதுமையடைந்த ஒருவரை கண்ணியத்துடன் நடத்தவேண்டும். இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப்படுத்தியது போலாகும் என்று அவர் சொல்கிறார். மேலும், ஒரு வாலிபன் ஒரு முதியவருக்கு மரியாதை செலுத்தினால், அவனது வயோதிக காலத்தில் அவனுக்கு மரியாதை செலுத்த, அல்லாஹ் இப்போதே ஒருவனை தயார் செய்துவிடுவான். எனவே முதியோர்களுக்கு தகுந்த மரியாதை கொடுங்கள், என்றும் சொல்கிறார். இனியாவது முதியவர்களை மதிக்க கற்றுக் கொள்வீர்களா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !