உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை காளி கோவிலில் ரூ.6 லட்சம் காணிக்கை

தில்லை காளி கோவிலில் ரூ.6 லட்சம் காணிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி   நடந்தது. சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம்   மற்றும் வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் ஐந்து இடங்களில்   உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். நேற்று   காலை இந்து சமய அறநிலைத்துறை உதவிஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் உண்டியல்கள்   திறந்து பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணும் பணி நடந்தது.  இதில் காணிக்கையாக 6 லட்சத்து 229 ரூபாய் காணிக்கையாக இருந்தது. மேலும், 4   கிராம் தங்கம், 48 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !