உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் குளம் ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி!

திருக்காமீஸ்வரர் கோவில் குளம் ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி!

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி அருகே வில்லியனுாரில் பி  ரசித்தி பெற்ற பழமைவாய்ந்த  திருக்காமீஸ்வரர் கோவில், 11ம் நுாற்றாண்டில் தருமபால சோழனால்  கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு,   இக் கோவிலில் ஜன., 20ம் தேதி  கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் திருக்குளம், புதுச்சேரியிலேயே மிகப் பெரிய ஜீவ குளமாகும். தீர்த்த இரு  தாய நாசினி, இருகைய சமநம், பிரம்ம தீர்த்தம் என்ற பெயர்களிலும் இக்குளம் அழைக்கப் படுகிறது. இக்குளத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்   விசாக நட்சத்திரத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். இந்த குளம், தற்போது, தொழிலதிபர் ஒருவர் செலவில், ரூ. 50 லட்சத்தில் புனரமைக்கப் பட்டு   வருகிறது.ஆகம விதிப்படி கிழக்கு–மேற்கு 129.3 அடி நீளத்திலும், தெற்கு–வடக்கு 159.1 அடி அகலத்திலும் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.   குளத்தின் நடுவே பழுதடைந்த நீராழி மண்டபமும் புதுப்பிக்கப்படுகிறது.பொதுப்பணித்துறை தொழில்நுட்ப வல்லுனர் குழு தலைவர் சத்தியமூர்த்தி,   கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன் மேற்பார்வையில், மே மாதம் 21ம் தேதி தேர் திருவிழாவிற்கு முன்பாக, குளம் புதுப்பிக்கும் பணியை முடிக்க   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !