தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்
ADDED :3512 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் சிம்மம், குதிரை, அன்னம்,பூத வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. முக்கிய விழாவான பொங்கல் விழா ஏப்,4ல் நடக்கிறது. ஏப்.,5 இரவு 7.35 மணிக்கு தேரோட்டம், ஏப்.,6ல் காலை 7.20 மணிக்கு பால்குடம், மாலை 6.15மணிக்கு ஊஞ்சலும்,இரவு10.35 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. ஏப்.,7 இரவு 7.30 மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாச்சாமி, குத்தகைதாரர் குழந்தைவேலு, ஊராட்சி தலைவர்கள் வசந்தா,சேகர்,முருகேசன், தமிழ்செல்வி, பாலு, மலைக்கண்ணு மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.