கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா!
ADDED :3582 days ago
செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில், சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி அடுத்த பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, 27 ம் தேதி ஆரணி சிவ தொண்டர்கள் பங்கேற்ற திருவாசக முற்றோதல் நடந்தது. நேற்று காலை கோட்டீஸ்வரர், கோகிலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 10:00 மணிக்கு 21 கலசங்களை அமைத்து, சிறப்பு ஹோமம் நடத்தினர். ஹோமத்தின் நிறைவாக கலச நீர் கொண்டு கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகபூஷிணி, திருப்பணி குழு தலைவர் ஜம்புலிங்கம் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.