வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் பல்லக்கு திண்டுக்கல் வருகை
ADDED :3582 days ago
திண்டுக்கல்: வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி சுவாமி பல்லக்கு திண்டுக்கல் நாகல் நகர் வந்தது. மார்ச் 22ல் வடமதுரையில் இருந்து சுவாமி பல்லக்கில் வீதி உலா புறப்பட்டது. முள்ளிப்பாடி, மேட்டுராஜக்காப்பட்டி வழியாக இறுதியாக திண்டுக்கல் நாகல் நகர் நேற்று வந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. அதில் மண்டகப்படி பக்தர்கள் டாக்டர் ராகவன், வழக்கறிஞர் ஸ்ரீராம் பாலாஜி, சம்பத்குமார், சிவகுமார், சவுந்திரராஜன், வேலு கோபால் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.