உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்துளசி அம்மன் கோவில் திருவிழா

பட்டத்துளசி அம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை அரங்கிப்புதுார் பட்டத்துளசி அம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, 11:00 மணியளவில், உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து தீர்த்த குடத்துடன், அம்மன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூ  ஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய திருவிழா நாளான இன்று காலை,6:00 மணிமுதல், 10:00 மணிவரை, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார பூஜை   நடக்கிறது. தொடர்ந்து, காலை, 11:00 மணியளவில் கூக்கல்தொரை பஜாரில் இருந்து, கோவில் வரை தேர் பவனி நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு,   பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு, மாவிளக்குடன், நாவலகு போட்டு, கோவில்வரை ஊர்வலம் நடக்கிறது.   விழாவில், பஜனை, ஆடல்பாடல், நேர்த்திக்கடன் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !