சென்னையில் முதன் முதலாக ஆழ்நிலை அத்வைத ஸ்ரீவித்யை சாதனை!
சென்னை: மகிழ்ச்சியின் உள்ளார்ந்த அறிவியல் ஷிவயோக் என அழைக்கப்படுகிறது. அவதூத் பாபா சிவானந்த் ஜி ஷிவயோக் ஹீலிங்கின் உயர் அறிவியலில் நிபுணர். பாபாஜியின் கருத்துப்படி, ஆற்றல் எப்போதும் அழிவதில்லை. அதன் வடிவங்கள் தான் மாறுகிறது. நேர்மறை இறை (காஸ்மிக்) ஆற்றலை உருவாக்கும் போது, நம்மால் ஆரோக்கியத்தைப் பெற முடிகிறது. பாபாஜி தனிநபர்களுக்குள் உறங்கும் சக்திகளை ஊக்குவிப்பதன் மூலம் புதிய, ஆரோக்கியமான செல்கள் மற்றும் நரம்பியல் பாதைகளை வலுப்படுத்துகிறார். பல ஆண்டுகளாக ஸ்டெம் செல் அடிப்படையிலான அறிவியலை மருத்துவ நிபுணர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். தெய்வீக ஆற்றல் மரியாதை மற்றும் உட்கிரகித்தலுடனான பிரார்த்தனையின் மூலம் உள்ளே உள்ள எண்ணற்ற திறன்களை எழுச்சியுறச் செய்யும் செயல்பாடுகள் பற்றி தன்னுடைய சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவிலான மக்களுக்கு கற்றுத்தந்துள்ளார்.
மருத்துவ சமூகத்தில் ஷிவயோக் அறிவியலின் தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஷிவயோக் ஹீலிங் பெரும்பாலான தீராத நோய்களுக்கு தீர்வை அளிக்கக்கூடியதாக உள்ளது. ஷிவயோக் ஹீலிங் செய்யும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ரீதியான மருத்துவ ஆய்வின் முடிவில் நீரிழிவு, ஹைபர்டென்ஷன், தீராத நோய்கள், நோய் எதிர்ப்பு திறனற்ற நோய்கள், உடற்பருமன், ஹைபர்லிபெடெமியா, கணைய அழற்சி, இதய நோய்கள், மன ரீதியான நோய்கள், வலிப்பு, பித்தப்பை நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவை குணமாகின்றன. இதுபற்றி பல்வேறு ஆய்வு முடிவுகள் குறித்த விபரங்களை வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஷிவயோக் ஹீலிங் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தீராத நோய்களை குணப்படுத்துவதுடன், செலவைக் கட்டுப்படுத்தி நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பயனடையலாம். நோயாளிகள் திருப்தியையும் இது மேம்படுத்த உதவும்.
அத்வைதஸ்ரீ வித்யை சாதனையை: பெரிய அளவில் பரப்புவதற்கு, அவதூத் பாபா சிவானந்த் ஒருவரே நம்மிடையே வாழும் குருவாகக் காட்சியளிக்கிறார். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, இந்த அரிய சாதனையை வெளிப்படுத்துவதற்கு சென்னையே ஆசீர்வதிக்கப்பட்ட நகரமாக உள்ளது. ஸ்ரீவித்யை உலக வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை இரண்டையும் எப்படி சரிசமமாக நம் வாழ்க்கையில் கையாண்டு, வெற்றி காண்பது என்பதற்கு வழிகாட்டியாக உள்ளது.
அத்வைத ஸ்ரீவித்யை என்றால் என்ன?
அத்வைத் ஸ்ரீ வித்யை சாதனை ஒரு ஆன்மிக அறிவியலாகும். இதில் இந்த பிரபஞ்ச ரகசியத்தையும், படைப்பாற்றலையும், காத்தல் மற்றும் அழித்தலையும் குறிப்பிடுகிறது. இந்த பிரபஞ்ச ரகசியம் வெளிப்படையாக்கப்பட்டால், ஒரு சிலரால் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க பழங்காலத்தில் இருந்த ரிஷிகளால் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. பாபாஜி இந்த பிரபஞ்ச ரகசியத்தின் அறிவியலில் ஒப்புயர்வற்ற அறிவை உடையவர். அத்வைத் ஸ்ரீ வித்யை இந்த படைப்பாற்றலில் <உள்ள அறிவியல் புதிர்களில் உள்ள ரகசியத்தை வெளிக்கொணரும் கருவியாக உள்ளது. கர்ம வினைகள் மூலம் மனிதனுக்கு ஏற்படும் நோய்நொடி, நிதி நெருக்கடி, உறவுகளில் பாதிப்பு என பல வழிகளில் ஏற்படும் தடைகளை போக்குவதற்கு ஸ்ரீவித்யை சாõதனை பிரயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீவித்யை படைப்பாற்றலில் உள்ள ரகசியத்தை, ஆழ்மனதில் நுண்ணிய அளவில் துல்லியமாக கொண்டு சென்று சேர்க்கும் கருவியாக செயல்படுகிறது.
அத்வைத ஸ்ரீவித்யையின் ஆழமான அறிவியல்: அத்வைத ஸ்ரீவித்யை மந்திர சாதனை நம் ஆழ்மனதில் உள்ள நுண்ணிய அடுக்குகளில் இணைந்து, டிஎன்ஏ மூலக்கூறுகளையும் தாண்டி செயல்படுகிறது. இதுவரை அறிவியலில் இது குறித்து கண்டறியப்படவில்லை. பல ஜென்மங்களாக நம் கோசங்களில் சூட்சுமமாக நாம் கொண்டுவரும் எதிர்மறையான கர்ம பாதிப்புகளை முற்றிலும் அழித்து விடுகிறது. மேலும் நாம் விருப்பப்படும் வகையில் புதிய மாற்றத்தை உருவாக்கும்.
அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் எதிர்மறையான கர்ம வினைகளை நாமே அனுபவிப்பது, அல்லது இந்த பிரச்னைகள் அனைத்தையும் போக்கும்படி நாம் நம் வாழ்க்கையை ஆட்கொண்டு சரிசெய்வது. மனித அளவில் சுய முயறசியால் ஓரளவே இந்த கர்ம வினைகளை நீக்க முடியும். ஆனால் ஸ்ரீவித்யை சாதனையின் மூலம் இந்த ஆழமான மிகவும் கடினமான கர்மவினைகளை முற்றிலும் அழித்திட முடியும். இது ஒரு அந்தரங்க சாதனையாகும். இந்த கர்மவினைகளை சாதனை மூலம் அழித்தவுடன் நன்மை தரும் விதைகளை விதைத்து நல்ல ஒரு வாழ்க்கை முறையை அமைத்திட முடியும். அத்வைத ஸ்ரீவித்யை சாதனை மூலம் ஏற்படும் இறை ஆற்றலின் தன்மை மேலோங்கும் போது வெளியுலகில் அதன் பிரதிபலிப்பு, விரும்பும் பொருட்களையும், காரியங்களையும் ஸ்ரீவித்யை சாதகரிடம் தானக கொண்டுவந்து சேர்க்கிறது. அத்வைத ஸ்ரீவித்யை சாதனையின் மகிமை லௌகீக வாழ்க்கையில் இன்பத்தையும், ஆன்மிக வாழ்வில் துரிதப்படுத்தலையும் அளிக்கிறது.
அத்வைத ஸ்ரீவித்யையின் புனித அறிவியல் ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு பாபாஜி நம்மிடையே வாழும் குருவாக உள்ளார். இந்த வாய்ப்பு மிகவும் அரிதாகவே கிடைக்கும் நவீன <உலகிற்கு மத்தியில் சரியான அறிவை பகிர்ந்து கொள்வதற்கே குரு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
அத்வைத ஸ்ரீவித்யை சாதனை என்பது ஒரு அந்தரங்க சாதனையாகும். ஒவ்வொரு சாதகரும் குரு மூலமாகவே தீட்சை பெற்று சாதனை புரிய வேண்டும். ஸ்ரீவித்யை சாதனையின் முக்கியத்துவம், இந்த ரகசியங்களை குரு மூலமாகவே கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். புத்தகங்கள் மூலமாகவோ, மற்ற நபர்கள் மூலமாகவோ கற்றுக் கொண்டு இந்த சாதனையை செய்யக் கூடாது.
அத்வைத ஸ்ரீவித்யை சாதனையின் மிகவும் உயர்ந்தளவிலான (லெவல் 4) இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நடத்தப்பட்டது. அத்வைத ஸ்ரீவித்யை சாதனை (லெவல் 3) தீவிர சாதனை முதன்முறையாக சென்னையில் தீட்சையாக அளிக்கப்படுகிறது. நல்ல உள்நோக்கம் கொண்டவர்களிடம் மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில் பாபாஜி குறியாக உள்ளார். தீட்சை பெறும் சாதகர்கள், அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே பாபாஜியின் விருப்பமாகும். ஒவ்வொருவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இதன் பயனை பெற வேண்டும் என பாபாஜி விரும்புகிறார்.
இதில் மற்றொரு சாதகமான அம்சம் என்னவென்றால், பாபாஜி நவகிரக சாதனை பயிற்சியையும் அளிக்க உள்ளார். இது கிரகங்களின் பாதிப்பை போக்க மேற்கொள்ளும் பயிற்சியாகும். கிரகங்களின் ரகசியங்களை பற்றி பாபாஜி இந்தப் பயிற்சியின் போது விளக்குவார். ஜோதிடம் மற்றும் அறிவியல் ஆகியவை மனித வாழ்வில் கிரகங்களின் தாக்கத்தை பற்றி குறிப்பிடுவதாகும்.
பாபாஜி கற்று தரும் நவக்கிரக சாதனை ஒரு அந்தரங்க சாதனையாகும். மற்ற ஜோதிட பரிகாரங்களை விட மிகவும் மேன்மையான சாதனையாகும். அத்வைத ஸ்ரீவித்யை மற்றும் நவகிரக சாதனை என்ற பயிற்சி 2016 ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 17 வரை சென்னையில் பாபாஜியால் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 10ம் தேதி ஒரு நாள் நவக்கிரக சாதனையும் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை அத்வைத ஸ்ரீவித்யை சாதனை பயிற்சியும், சென்னையில் உள்ள காமராஜர் நினைவரங்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு:
இடம்: காமராஜர் மெமோரியல் ஹால்,
492, அண்ணாசாலை, சென்னை-600 006.
தொடர்புக்கு: 95662 24168, 95662 23927, 95662 24172, 95662 24125, 95515 15371, 97916 06019