திருத்தணி திரவுபதியம்மன் திருக்கல்யாணம்
ADDED :3518 days ago
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, உற்சவர் திரவுபதியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடந்து வருகிறது.நேற்று மதியம், திரவுபதியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒரு கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு, உற்சவர் திரவுபதியம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், 1,000 பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாளை சுபத்திரை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடக்கிறது.