சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ADDED :3519 days ago
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில், 15ம் தேதி கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.