கூத்தாடியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்
ADDED :3519 days ago
சிங்கம்புணரி: கூத்தாடியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. மார்ச் 22ல் காப்புக்கட்டுடன் விழா துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை,கும்மியாட்டம், கோலாட்ட வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால்குட மெடுத்து கோயிலுக்கு வந்தனர்.அம்மனுக்கு பாலாபிஷேகம், ஆராதனை நடந்தது.பெண்கள் முளைப்பாரி எடுத்து, மாவிளக்கு வழிபாடு செய்தனர். கோயில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது.