உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் ராஜகாளியம்மன் கோயிலில் உற்சவ விழா

நத்தம் ராஜகாளியம்மன் கோயிலில் உற்சவ விழா

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் உற்சவ விழா நடந்தது. கடந்த மார்ச் 29 அன்று காலை கன்னிமார் தீர்த்தம் ஆடி, சந்தனகருப்பு கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. இரவு அம்மன் குளத்தில் கரகம் பாவித்து கோயிலுக்கு புறப்பாடு நடந்தது. அம்மன் கோயிலை சென்றடைந்ததும் கிடா வெட்டு நடந்தது. மறுநாள் காலை அன்னதானம் மற்றும் சந்தனகருப்பு கோயிலில் அபிஷேகம் நடந்தது. மாலை காளியம்மன் கோயில் முன்பு திருவிளக்கு பூஜையை தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்து அபிஷேகம் நடந்தது. நேற்று பகலில் பானகம், நீர்மோர், அரிசி கஞ்சி அபிஷேகம் நடந்தது. இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மன் குளத்தில் கரகம் விடப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !