உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிய பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்

கரிய பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி ஸ்ரீ கரிய பெருமாள் கோவிலில், மகா சுதர்சன ஹோமம், வரும் 3ம் தேதி நடக்கிறது. நாளை மாலை 6:00 மணி முதல், அனுக்ஞை, மகா சங்கல்பம், வாசுதேவ புண்யாகம், கும்பஸ்தாபனம் நடக்கின்றன. 3ம் தேதி, காலை 7:00 மணி முதல், வேதபாராயணம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்சன ஹோமம், நவக்கிரக ேஹாமம், நரசிம்ம ேஹாமம், மகா லட்சுமி ஹோமம் உட்பட பூஜைகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் மற்றும் மாக்கினாம்பட்டி ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !