மல்லசமுத்திரம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
ADDED :3520 days ago
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. மல்லசமுத்திரத்தில், சின்னமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த மார்ச், 3ம் தேதியில் கம்பம் நடப்பட்டு துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பால்குட வீதி உலா, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா, நையாண்டி மேளக்கச்சேரி மற்றும் பல்வேறு அபி?ஷகங்கள் நடந்தன. நேற்று, காலை, 6 மணியளவில், ஏராளமான பக்தர்கள் பம்பை அடித்துக்கொண்டு பூ மிதித்தனர்.