பெனுகொண்டா வாசவி திருவடிகளுக்கு வரவேற்பு!
ADDED :3680 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில், பெனுகொண்டா வாசவி மாதாவின் திருவடிகளுக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டிவனத்திலுள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த பெனுகொண்டா வாசவி மாதாவின் திருவடிகளுக்கு, பக்தர்கள் சார் பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவஸ்தான தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வாசுதேவன், சீனுவாசன் மற்றும் இளைஞர் சங்கத்தின் நாகராஜகுப்தா, முரளி, வாசவி கிளப் துணை ஆளுநர்கள் சிவக்குமார், வெங்கட்ரமணன், தலைவர்கள் நவநீதகிரு ஷ்ணன், நடராஜன், கோமதி பட்டாபிராமன், மாவட்ட தலைவர்கள் சங்கர், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவிலில் வைக்கப் பட்டிருந்த, பெனுகொண்டா வாசவி மாதாவின் திருவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம், குங்கும அர்ச்சனை, தம்பதி பூஜைகள் ஆகியன நடந்தது.