பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :5174 days ago
புதுச்சேரி : பெரிய காட்டுப்பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 11 மணிக்கு பக்தர்கள் செடல் போட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன்கள் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அம்மன் பெயரில் கதை வர்ணிப்பு நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.