உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் சுந்தரகாண்ட பேருரை

ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் சுந்தரகாண்ட பேருரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், சுந்தரகாண்ட பேருரையின் தொடக்க விழா, நேற்று முன்தினம் துவங்கியது. திருவண்ணாமலை செங்கம் சாலை, அக்ரஹாரக் கொல்லையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம், 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு சுந்தரகாண்டம் என்ற தலைப்பில், ஆஸ்ரம வளாகத்தில் மாலை, 6 மணி முதல், 8 மணி வரை, பேராசிரியை சரஸ்வதி ராமநாதன் பேருரையை நிகழ்த்தினார். ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !