கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :3519 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. இக்கோயிலில் பங்குனித் திருவிழாவாக பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. கீரணிப்பட்டி,இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, விராமதி, கீழச்சிவல்பட்டி, சேவிணிப்பட்டி, அச்சரம்பட்டி, முத்தூர்,மிதிலைப்பட்டி, ராங்கியம்,குருவிக்கொண்டான்பட்டி, செவ்வூர்,மாங்கொம்பு உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமத்தினர் பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். அதிகாலை 3.30 மணிக்கு பூக்களால் அம்மனுக்கு அபிசேகம் நடந்தது. ஏற்பாட்டினை இளையாத்தங்குடி தேவஸ்தானத்தினர் செய்தனர்.