பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3519 days ago
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் வடமாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் அர்சகர்களான திருஞான சம்பந்த குருக்கள், பாலசுப்பிரமணியம் செய்தனர்.