திருப்பூர் கருப்பராயன் கோவில் விழா!
ADDED :3519 days ago
திருப்பூர் : தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவிலில், தீர்த்த பூஜை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவில், 20ம் ஆண்டு பங்குனி மாத தீர்த்த திருவிழா, கடந்த, 6ல் துவங்கியது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில், நடராஜ் தியேட்டர், ஏ.பி.டி., ரோடு வழியாக ஊர்வலமாக வந்து, தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவிலை அடைந் தனர். நேற்று மதியம், 1:00 மணியளவில், கருப்பராயனுக்கு தீர்த்த பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிடாய்கள் வெட்டப்பட்டன. அய்யனுக்கு படையலிட்டு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.