முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :3519 days ago
திருப்பூர்: தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி முத்துமாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று காலை, கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். மாலையில், மேள தாளம் முழங்க, முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் சென்றனர்; நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். குதிரை வாகனத்தில் அம்மன், வீதி உலா வந்தார். இன்று, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.