பங்குனி அமாவாசை: வனபத்ரகாளியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
ADDED :3519 days ago
மேட்டுப்பாளையம்: பங்குனி அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். தமிழ் ஆண்டின் கடைசி அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பவானி ஆற்றில் நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வணங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ராமு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.