அமாவாசையை முன்னிட்டு வால்பாறை கோவில்களில் சிறப்பு பூஜை!
ADDED :3519 days ago
வால்பாறை: அமாவாசையை முன்னிட்டு, வால்பாறையில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை சுப்ரமணிய சுவாமி, அண்ணாநகர் முத்துமாரியம்மன், அக்காமலை எஸ்டேட் இரண்டாம் பிரிவில் உள்ள முருகன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன், சிறுவர் பூங்கா சக்தி மாரியம்மன், காமராஜ்நகர் மாரியம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.