உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் 11ல் சித்திரை பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவிலில் 11ல் சித்திரை பிரம்மோற்சவம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வரும், 11ம் தேதி, விநாயகர் உலாவுடன் துவங்குகிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுக்கு இரு முறை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அந்த வகையில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வரும், 11ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது.வரும், 12ம் தேதி காலையில், கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு கேடய உலாவில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, 13ம் தேதி முதல், ஏப்., 21ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில், ஒவ்வொரு வாகனத்தில், மாடவீதியில் உற்சவர் வீதியுலா வருகிறார். முக்கிய நிகழ்வான தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. 21ம் தேதி இரவு, கொடி இறக்கமும், 22ம் தேதி சப்தாபரணம் காதம்பரி விழாவுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !