பங்குனி மாத அமாவாசை: பண்ணாரி கோவிலில் கூட்டம்
ADDED :3519 days ago
சத்தியமங்கலம்: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் உச்சிகால பூஜை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். குண்டம் விழாவிற்கு வர முடியாத பக்தர்கள் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். குண்டத்தில் உப்பு, மிளகு கொட்டி வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர். தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார்.