கீழ்குந்தா கிராமத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :3519 days ago
மஞ்சூர்; கீழ்குந்தா கிராமத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நீலகிரியில், நடப்பாண்டு துவக்கத்திலிருந்து மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. வறட்சியால் தேயிலை தொழில், மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு வேலை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு, மழைவேண்டி, கீழ்குந்தா காடெஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். பூஜையில் ஊர் தலைவர்கள் உட்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.