உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொம்பு முளைத்த தேங்காய்!

கொம்பு முளைத்த தேங்காய்!

ஓசூரிலிருந்து உத்தனபள்ளி வழியாக ராயக்கோட்டை செல்லும் வழியில் அகரம் திருத்தலத்தில் உள்ளது பாலமுருகன் திருக்கோயில் இக்கோயிலில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. லாரியில் தேங்காய் ஏற்றும்போது, தேங்காய் முதலாளியிடம் லாரி ஓட்டுநர், பாலமுருகனுக்கு உடைக்க தேங்காய் ஒன்று கேட்க, பாலமுருகனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? என்று தேங்காய் முதலாளி கேலியாகக் கேட்டிருக்கிறார். சற்று நேரத்தில் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தேங்காய்கள் ஒன்று இரண்டு கொம்புகளோடு காணப்பட்டதாம். அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட தேங்காய் வியாபாரி பாலமுருகனிடம் மன்னிப்பு கோரியதோடு, கொம்பு முளைத்த அத்தேங்காயை ஓட்டுநரிடம் கொடுத்து, பாலமுருகன் கோயிலில் அதைச் சமர்ப்பிக்கும்படி கூறினாராம். அத்தேங்காய் இன்றுவரை கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !