திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கிணையான 6 கோயில்களில் முதன்மையானதாகும். இங்கு சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தியாக தனி சன்னதிக்கொண்டு விளங்கி வருகிறார். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இந்த கோயில் ஆதி சிதம்பரம் என அழைக்கபடுகிறது. மேலும் இங்குள்ள சந்திரன், அக்னி மற்றும் சூரியன் உள்ளிட்ட முக்குளங்களில் நீராடி சாமியை வணங்கினால் எல்லா அருளையும் பெறலா ம் என்பது ஜதீகம். மேலும் பிரம்ம வித்யாம்பாள் அம்மனை வழிபட்டால் கல்வி, அறிவு உள்ளிட்ட பல்வேறு நற்பலன் கிடைக்கும்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற 11ம்தேதி காலை 10மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி கோயிலின் வளாகத்தில் அமைக்கபட்டுள்ள யாக சாலையில் சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பாள், அகோரமூர்த்தி, நடராஜர், புதன் உள்ளிட்டசாமிகளுக்கும் மற்ற பரிவார சாமிகளுக்கும் என 125 யாக குண்டங்கள் அமைக்கபட்டுள்ளன. இதில் முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில் 108 வகையான ஷோமப்பொருட்கள், பழங்கள், உள்ளிட்ட பொருட்கள் போடப்பட்டது. மேலும் மகாபூர்ணாகுதியும் தீபாரதனையும் காட்டபட்டது. நேற்று கா லை இராண்டாம் கால யாக பூஜையும், மாலை முன்றாம் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை நான்காம் காலம், மாலை ஜந்தாம் கால யாக பூஜையும் நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், மேலாளர் கண்ணன், பேஸ்கார் திருஞானம், தலைமை அர்ச்சகர் கந்தசாமிக்குருக்கள், சர்வசாதக குரு க்கள் வினோத்குருக்கள் செய்து இருந்தனர்.