சிவன் கோயிலில் தீர்த்தப் பிரசாதம்!
ADDED :3867 days ago
பொதுவாக, பெருமாள் கோயிலில்தான் தீர்த்தப் பிரசாதம் தருவார்கள். ஆனால், திருவாலங்காடு ஸ்ரீவடாரண்யேஸ்வரர் கோயிலில் அருள்புரியும் ஸ்ரீநடராஜர் சன்னிதியில் தீர்த்தப் பிரசாதம் தருகிறார்கள். ஈசன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்க நிலை அடைந்தார்களாம். உடனே சிவபெருமான், அவர்களுக்குத் தமது சிரசில் குடி கொண்டிருந்த கங்கையைத் தெளித்து மயக்கத்தைப் போக்கி எழுப்பினார். அதனால், இந்த விபூதிக்கு பதில், தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறதாம்.