உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவளர்க்கும் அம்பாள்

கருவளர்க்கும் அம்பாள்

கும்பகோணம் மருதாநல்லூர், கருவளர்சேரியில் உள்ளது அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். அம்பாள் புற்றுமண் உருவில் இங்கு சுயம்புவாக எழுந்தருளி உள்ளதால் அபிஷேக ஆராதனைகள் கிடையாது. சாம்பிராணி தைலக்காப்பு மட்டும்தான். இத்தல இறைவி பெண்கள் கருதரிக்கவும். அக்கரு நன்றாக வளரவும் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்பாளின் முகம் மட்டுமே தரிசனத்துக்குக் கிட்டும். உடல் முழுவதும் திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும், சிவராத்திரி நாளில் மட்டுமே அம்பாளின் முழு உருவை தரிசிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !