வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் யுகாதி விழா
ADDED :3493 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் யுகாதி திருநாள் விழா மற்றும் புதுக்கணக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு சூர்ய நமஸ்காரம், ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து குலதெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு ஆர்ய வைசிய மகா சபைக்கு புதுக்கணக்கு பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆர்யவைஸ்ய மகாசபை தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.