உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்!

உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்!

உடுமலை: தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கம்மநாயுடு மகாஜன சங்கம் மற்றும்  கவரநாயுடு சமூக நல சங்கங்கள் சார்பில், யுகாதி விழா கொண்டாடப்பட்டது.  உடுமலை, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டியில் உள்ள பகவதி  அம்மன் மற்றும் ரேணுகாதேவி கோவிலில், நேற்று மகா கணபதி ேஹாமம், சக்தி ேஹாமமும் நடந்தன. காலை, 7:30 மணிக்கு, அம்மனுக்கு திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும், ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது.

காந்திநகர், எம்.ஜி.லே–அவுட்டில் உள்ள, ரேணுகாதேவி புற்றுக்கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஏப்., 1 முதல் அம்மனுக்கு தினமும்,  அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. உடுமலை ரேணுகாதேவி ஆன்மிக அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார் பில், உடுமலை – பழநி ரோட்டில் உள்ள, ஜி.வி.ஜி., கலையரங்கில், யுகாதி சிறப்பு பூஜையும், காலை, 10:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை, திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு அண்ணா குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து  மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஜமதக்னி மகரிஷி – ரேணுகாதேவி திருக்கல்யாணமும், கண்ணாடி தரிசனம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உடுமலை,  வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில், உடுமலை கவரநாயுடு சமூக நலச் சங்கம் சார்பில் நடந்த நான்காமாண்டு யுகாதி விழாவில்,  யுகாதி திருநாள் பூஜையும், ஸ்ரீ கிருஷ்ண நாட்டிய நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !