உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காக்காயந்தோப்பில் இன்று தீமிதி திருவிழா

காக்காயந்தோப்பில் இன்று தீமிதி திருவிழா

புதுச்சேரி: காக்காயந்தோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது. அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு  அ ங்காளபரமேஸ்வரி  அம்மன் கோவிலின் 26ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினந்தோறும்  காலை அம்மனுக்கு  அபிஷேக ஆராதனை, இரவு மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. இன்று ௯ம் தேதி மாலை 6.௦௦ மணிக்கு தீ  மிதி திருவிழா நடக்கிறது. இரவு 7.௦௦ மணிக்கு அம்மன் வீதி உலா, நள்ளிரவு 12.௦௦ மணிக்கு  மயானத்தில் சக்தி பூஜை நடைபெறுகிறது. 11ம் தேதி  மாலை 6.௦௦ மணிக்கு மயானக் கொள்ளை விழா, 12ம் தேதி இரவு 8.௦௦ மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !