பழநி கிரிவீதி கோயில்களில் கும்பாபிஷேக யாக பூஜை
ADDED :3487 days ago
பழநி: பழநி மலைக்கோயில் தெற்குகிரிவீதியிலுள்ள வனதுர்க்கை, மேற்குகிரிவீதி மகிஷாசுரமர்த்தினிஅம்மன் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்காக கோபுரங்கள், சிலைகள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்.,3ல் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இன்று( ஏப்.,9ல்) காலை 5.30மணி விநாயகர் பூஜை, கணபதிஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை வேள்வி பூஜைகள் நடக்கிறது. ஏப்.,11ல் காலை 9 மணிக்கு வனதுர்க்கையம்மன் கோபுர விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகமும், மகிஷாசுரமர்த்தினியம்மன் கோயிலில் காலை 9.45 மணிக்கு கோபுரவிமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்துள்ளனர்.