உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

பழநியில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

பழநி: பழநியில் கார்த்திகையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோவிலுக்கு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று ஞாயிறு என்பதால், கார்த்திகை விழாவை முன்னிட்டு அதிகாலை, 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்தக்குடங்கள், காவடிகள், பால்குடங்களுடன் குவிந்தனர்.இதனால் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில், மூன்று மணி நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். வெளி பிரகாரம் வரை நீண்ட வரிசையில், நான்கு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் பொதுதரிசன வழியில், மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !