கண்டாச்சிபுரம் பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை
ADDED :3487 days ago
கண்டாச்சிபுரம்: ஒதியத்துார் கிராமத்திலிருந்து, பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து, திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். முன்னதாக பாதயாத்திரைக் குழுத் தலைவர் தமிழ்மணி தலைமையில், கூட்டுப்பிரார்த்தனையும், வைகுந்த வாசன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.